ஓம் எனப் பெரியோர்கள் என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய்த் துயர்
தீய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவுமற்றே மனம்
நாடறிதாய்ப் புந்தி தேடறிதாய்
ஆமெனும் பொருளனைத்தாய் வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்
நின்றிடும் பிரமமென்பார் அந்த
நிர்மலப் பொருளினை வணங்கிடுவேன்
0 comments:
Post a Comment